+91 7708941960 madhiacademy@gmail.com

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ ஏப்ரல் – 2023

தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

2023 மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Govt.Examination Service Centres) 26.122022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்கிழமை) வரையிலான நாட்களில் (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டம் (தத்கல்)

மேற்குறிப்பிட்ட தேதிகளில் மார்ச்/ ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (Tatkal) 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் 05.00 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கால அட்டவணை

மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த தேர்வு கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

பழைய பாடத்திட்டதில் (Old Syllabus) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்

ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் (Old Syllabus) எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், மார்ச் /ஏப்ரல் 2023-ல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகளை புதிய பாடத்திட்டத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

பழைய பாடத்திட்டத்தில் கலைப்பிரிவில் உள்ள கணினி அறிவியல், வணிகக் கணிதம், இந்தியப் பண்பாடு மற்றும் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள பாடங்கள் ஆகியவை புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்பாடங்களின் விவரங்களடங்கிய பட்டியலை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். அப்பட்டியலில் உள்ள பாடங்களில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள், அப்பாடங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதியுள்ளோர்

தனித்தேர்வர் வகை

மேல்நிலை முதலாம் ஆண்டுதேர்வினை

முதன் முறையாக எழுத விண்ணப்பிக்கும்

தனித்தேர்வர்கள் (HSE First Year – Direct Private)

விண்ணப்பிக்கத் தகுதியுள்ளோர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளி இருத்தல் வேண்டும். (அதாவது மார்ச் 2023-60 தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான தேர்வில், மே -2022 அல்லது அதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) பத்தாம் வகுப்பிற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் வாயிலாக பெற்ற இணைச் சான்றிதழை (Equivalence Certificate) கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். இணைச் சான்றிதழ் சமர்ப்பிக்காத தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 01.04.2023 அன்று 15 % வயது (15 வருடங்கள் 6 மாதங்கள்) நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும்.

பக்கம் 4-இல் குறிப்பிட்டுள்ள ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனுமொன்றில் குறிப்பிடப் பட்டுள்ள நான்கு பாடங்களுடன் (செய்முறை அல்லாத பாடங்கள்) மொழிப்பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

செலுத்த வேண்டிய

கட்டணம்

தேர்வுக் கட்டணம்-150/- இதரக் கட்டணம் -35/- ஆன் லைன் பதிவுக் கட்டணம்- 50/-

மொத்தக் கட்டணம் – ரூ.235/-

சிறப்பு அனுமதிக் கட்டணம் (தத்கல்) – ரூ.1000/

தேர்வெழுத

விண்ணப்பிக்கும்

தனித்தேர்வர்கள்

மனுதாரர் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்

தேர்வினை வேறு மாநிலத்தில் ஏற்கனவே எழுதியிருக்கக் கூடாது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத

பாடங்களில்

விண்ணப்பிக்கலாம்.

தேர்வெழுத

தேர்வுக் கட்டணம்

(ஒவ்வொரு பாடத்திற்கும்)-

ரூ.50/-

இதரக் கட்டணம் – ரூ.35/- ஆன்-லைன் மற்றும்

பதிவுக் கட்டணம் – ரூ.50/-

சிறப்பு அனுமதிக்

(HSE First Year. Arrear)

கட்டணம் (தத்கல்) –

ரூ.1000/-

8

அரசாணை (நிலை) எண்.125, பள்ளிக்கல்வி (ப.க.7(1))த் துறை, நாள்:15.07.2022-ல் மேல்நிலைக் கல்வியில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்கப்பட்டதன் அடிப்படையில், 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் இணைப்பில் கண்டுள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவின் பாடநூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மறுசீரமைக்கப்பட்டும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் இடம் பெற்றுள்ள கணினித் தொழில் நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாடுகள் என்ற பாடங்களுக்கு மாற்றாக வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) என்ற புதிய பாடம்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுக் கடித (நிலை) எண்.215/ஆதே/2022, நாள். 07:122022-ன்படி, பழைய தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள கணினித் தொழில் நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாடுகள் என்ற பாடங்களில் தேர்வெழுதி தோல்வியுற்ற / வருகைபுரியாத தேர்வர்கள் மார்ச் 2023 பருவம் முதல் முதல் ஜூன் 2024 வரை கணினித் தொழில் நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாடுகள் என்ற பாடங்களிலேயே விண்ணப்பித்து தேர்வெழுதிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் மேற்கண்ட பாடங்களில் தோல்வியுறும் தேர்வர்கள் மார்ச் 2025 முதல் கணினித் தொழில் நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாடுகள் என்ற பாடங்களுக்கு மாற்றாக வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) என்ற பாடத்தில் தேர்வெழுத வேண்டும்.

பயின்று

மேலும் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள 8 தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற / வருகை புரியாத தேர்வர்கள் மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை 2021-2022 பாடதிட்டத்தின்படி தேர்வெழுதிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் தோல்வியுறும் தேர்வர்கள் மார்ச் 2025 முதல் மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத வேண்டும்.

01 அடிப்படை இயந்திரவியல் (Basic Mechanical Engineering)

02 அடிப்படை மின்பொறியியல்(Basic Electrical Engineering)

03 அடிப்படை மின்னணு பொறியியல் (Basic Electronics Engineering)

04 நெசவியலும் ஆடை வடிவமைப்பும் (Textiles and Dress Designing)

05

செவிலியம் (Nursing)

06 வேளாண் அறிவியல் (Agricultural Science)

07

17

அலுவலக

மேலாண்மையும்

செயலியலும் (Office Management and

Secretaryship)

08 கணக்குப் பதிவியலும் தணிக்கையியலும் (Accountancy and Auditing)

விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Govt Examinations Service Centres)

கல்வி

தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்திட

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Govt Examinations Service Centres) உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தங்களுடைய விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

4

ஆன்-லைனில் விண்ணப்பத்தினைப்

தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும்.

பதிவு செய்த

பிறகு,

அதில் குறிப்பிடப்பட்டுள்ள

விண்ணப்ப எண்ணை (Application number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம்.

முக்கிய அறிவுரைகள்:

  1. தேர்வெழுத தேர்வு செய்யப்பட வேண்டிய பாடத்தொகுதிகள் (புதிய

பாடத்திட்டம்)

முதன் முதலாக மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வெழுதும் “HP”வகை நேரடித் தனித்தேர்வர்கள், புதிய பாடத்திட்டத்தில் பகுதி I மற்றும் Π மொழிப்பாடங்களுடன் பின்வரும் ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனுமொன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். ஒரு முறை தேர்வு செய்த பாடத் தொகுதியினை, எக்காரணத்திற்காகவும் பின்னர் மாற்றம் செய்ய இயலாது.

பகுதி III பாடங்கள்

பாடத்

தொகுப்பு

எண்

2704

வரலாறு

பொருளியல்

வணிகவியல்

கணக்குப் பதிவியல்

2705

பொருளியல்

அரசியல் அறிவியல்

வணிகவியல்

கணக்குப் பதிவியல்

2706

பொருளியல்

வணிகவியல்

கணக்குப் பதிவியல்

அறவியல் மற்றும் இந்தியக் கலாச்சாரம்

2707

பொருளியல்

வணிகவியல்

கணக்குப்

சிறப்பு மொழி (தமிழ்)

பதிவியல்

2708

பொருளியல் வணிகவியல்

கணக்குப்

வணிகக் கணிதம் மற்றும்

பதிவியல்

புள்ளியியல்

  1. தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை

மையங்களில் பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோர், காது கேளாதோர்

மற்றும் வாய் பேசாதோர் ஆகிய மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

III. தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் (Govt.Examination Service Centre) தேர்வுக் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

ஏற்கனவே+1 தேர்வெழுதி

தோல்வியுற்றோர்

  1. அச்சிட்டு

ஒருங்கிணைந்த

(+1 LÝMILD +2)

முதன் முறையாக +1 தேர்வெழுதுவோர்

வழங்கப்பட்ட 1.

பத்தாம் பெற்றதற்கான சான்றிதழ்.

வகுப்பு தேர்வில்

அசல்

தேர்ச்சி மதிப்பெண்

(அல்லது)

மதிப்பெண் பட்டியலின் (Statement of Marks) சுயசான்றொப்பமிட்ட நகல் (Self Attested Copy)

(அல்லது)

ஏற்கனவே +1 தேர்வெழுதிய பொழுது இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) 6 (Photo copy) / தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) நகல்.

பத்தாம் வகுப்பிற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் சான்றிதழ் மற்றும் அச்சான்றிதழ் பத்தாம் வகுப்பிற்கு

இணையானதுதான்

இணைச்சான்றிதழ்

என்பதற்கான

(Equivalence

Certificate) ஆகியவற்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

2.

3.

2.

பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல்

3.

இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளிமாநிலத் தேர்வர்கள் மட்டும்)

சமர்ப்பிக்கும்

தனித்தேர்வர்களின்

மேற்குறிப்பிட்டுள்ள இணைப்புகளை

விண்ணப்பங்களே ஆன் – லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

IV.மாற்றுத் திறனாளிகளுக்குச்சலுகைகள்

மாற்றுத் திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் நேரம் கோருதல் போன்ற அரசாணைகளில்

குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெற விரும்பினால், தங்களது விண்ணப்பத்துடன் தனியே சலுகை கோரும் கடிதத்தையும், உரிய மருத்துவச் சான்றிதழ் நகல்களையும் கட்டாயமாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தினை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்யும்பொழுது, தேர்வெழுத கோரும் சலுகைகளையும் பதிவேற்றம் செய்யுமாறு சேவை மையங்களில் தெரிவித்தல் வேண்டும்.

V.செய்முறைத் தேர்வில் பங்கேற்கவுள்ள தேர்வர்களுக்கான அறிவுரை (மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள்)

செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டிய தேர்வர்கள், அரசுத் தேர்வுகள் துறை அறிவிக்கும் நாட்களில் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்த பின்பு, அதில் குறிப்பிட்டுள்ள கருத்தியல் தேர்வெழுதவுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டிய நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

  1. ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான குறிப்பு

அரசாணை எண் (2டி) 50, பள்ளிக்கல்வித் (ஜிஇ1)துறை, நாள்.09.08.2017-ன்படி செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சிப் பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற்று செய்முறைத் தேர்வில் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும். மேலும், எழுத்துத்தேர்வு, அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டு மொத்தமாக 100-க்கு குறைந்த பட்சம் 35 மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். செய்முறைத்தேர்வில் பங்கேற்காமல், தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண்(35) பெற்றிருந்தாலும், அத்தேர்வர்கள் தேர்ச்சி பெறாதவர்களே ஆவர்.

ஏற்கனவே எழுத்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் வேண்டாம்.

தேர்வினை எழுத 

ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய

இரண்டையும் கட்டாயம் எழுதவேண்டும்.

வ,

எண்

பாடங்கள்

கருத்தியல் தேர்வு

தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

செய்முறைத் தேர்வு

1.

1

2

3

2.

செய்முறைத்

தேர்வுள்ள

பாடங்கள்

மொழிப் பாடங்கள்

செய்முறைத்

15

அகமதிப்பீடு

மொத்தம்

(3,4,5)

5

6

4

  1. பங்கேற்றிருக்க

வேண்டும்

  1. குறைந்தபட்ச

குறைந்தபட்ச

மதிப்பெண் இல்லை

மதிப்பெண்

இல்லை

(மொத்த

(மொத்த

(மொத்த

மதிப்பெண்கள்-10)

மதிப்பெண்கள்-70)

மதிப்பெண்கள்-20)

25

தேர்வு இல்லாத

பாடங்கள்

(மொத்த

தொழிற்கல்வி-

மதிப்பெண்கள் – 90)

எழுத்துத் தேர்வு

பாடங்கள்

  1. தொழிற்கல்வி.

செய்முறைப்

பாடங்கள்

35

35

குறைந்தபட்ச

மதிப்பெண் இல்லை

35

(மொத்த

மதிப்பெண்கள்-10)

20

குறைந்தபட்ச

மதிப்பெண் இல்லை

35

(மொத்த

(மொத்த

மதிப்பெண்கள்-75)

மதிப்பெண்கள்-25)

VII. மேல்நிலைத் தேர்வுகள் நடைபெறும் முறை

  1. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 600 மதிப்பெண்களுக்கும், மேல்நிலை

இரண்டாம் ஆண்டு தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

  1. தேர்வு நேரம் – 3மணி நேரம்.

(மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக www.dge.tn.gov.in என்ற

வெளியிடப்பட்டுள்ள

அரசாணைகளை

இணையதளத்தில் காணலாம்.)

VIII நேரடி தனித்தேர்வர்கள் பாடங்களில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் குறித்த விளக்கம்

  1. ஒவ்வொரு

நடைபெறும்.

பாடத்திற்கும் 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு

  1. அரசாணை(நிலை) எண்.243, பள்ளிக் கல்வி(ஜிஇ1)த் துறை, நாள்.17.11.2017-ன் படி, பள்ளி மாணவர்களைப் போன்று, நேரடித் தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படாது. அதற்குப் பதிலாக, நேரடித் தனித்தேர்வர்கள் 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படும். முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைய, நேரடித் தனித்தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் 100 மதிப்பெண்களுக்கு குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெறவேண்டும்.
  2. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் முறை

அரசாணை (நிலை) எண்.195, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, நாள்.14.09.2018-ன்படி,

i.

ii.

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் சமயம், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு 600 மதிப்பெண்கள் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) வழங்கப்படும்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிழ்கள் வழங்கும் சமயம், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் 

(Statement of Marks) மட்டும் வழங்கப்படும்.

அவ்வகையான

தேர்வர்களுக்கு அவ்விரு தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) மட்டுமே வழங்கப்படும்.

  1. வெளி மாநிலத் தேர்வர்கள்

வெளி மாநிலத்தில் படிப்பை முடித்து மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுக்கு நேரடித் தனித்தேர்வராக விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்களுடன் தாங்கள் பயின்ற மாநிலத்திலிருந்து பெற்ற அசல் இடப்பெயர்வு சான்றிதழையும் (Migration Certificate) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். வெளி மாநிலத் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினை எழுதியவர்கள் நேரடித் தனித்தேர்வராக

விண்ணப்பிக்க இயலாது.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் விநியோகம் :-

ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள்

அரசாணை (நிலை) எண்.. 34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு (எஸ் 1) துறை, நாள்.30.03.2022-ன் படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு (1) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) -க்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத் தேர்வு சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

முக்கியக்குறிப்பு

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இடம்: சென்னை – 6

நாள்: 19:122022

ஒம்/- இயக்குநர்